Loading...
தன்னலமற்ற உதவி Loading...

Loading...
ஆசிரியர்: சுஜய்Loading...
நிலை 4

Book Name: Thannallamatra Uthavi
Author Name: Sujay Kaleeswaran
ISBN: 978-81-19636-14-3
First Edition in Tamil : 2023
Published By:
Tamilezhuthapadi Publications and Research| www.tamilezhuthapadi.org
296,Mehta Nagar,
Chennai - 600069.
Tamilnadu, India.
Printed by
Vanakkam Printers, Chennai, India
Some rights reserved. The text and illustrations are CC-BY 4.0 licensed which means you can download the digital version of this book, remix illustrations and even make a new story - all free on tamilezhuthapadi.org. No part of this book should be reproduced mechanically by any other printers or publishers without the prior written permission of the publisher.

ஒரு ஊரில் அகிலன் எனும் ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் எந்த உதவியும் செய்யாமல் சுயநலவாதியாக இருந்து வந்தான்.பிறர் துன்பத்தில் உள்ள போது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவனுக்குத் துளி அளவும் இல்லை.

ஒரு சமயம் அகிலன் மற்றும் அவனது நண்பர்களும் விளையாடிக் கொண்டிருக்கும் போது, ஒரு நாய் அடிபட்டிருப்பதைக் கண்டனர். அவனது நண்பர்கள் அனைவரும் அந்த நாய்க்கு முதலுதவி அளித்து உதவினர்.
அச்சமயம் அகிலன் எதையும் கண்டு கொள்ளாமல் தனியே நின்று கொண்டிருந்தான். அவன் எந்த ஒரு உதவியும் செய்ய முன் வரவில்லை. மாறாக தன் நண்பர்களிடம் விளையாட்டுப் பூங்காவிற்குச் செல்ல நேரமாகிறது விரைந்து வாருங்கள் என்று கூறினான். அகிலனின் இந்தச் செயல் அவனது நண்பர்களுக்கு மிகவும் சோகத்தைத் தந்தது.

அவர்கள் தம் நண்பன் அகிலன்,அனைவரிடமும் அன்பாகவும்,சுயநலமின்றி உதவி செய்யும் மனதோடும் திகழ வேண்டும் என்று விரும்பினார்கள். அதற்காக அகிலனின் நண்பர்கள் அனைவரும் ஒரு தீர்மானம் கொண்டு வந்தனர். அதன்படி அவர்கள் அகிலனுக்கு எந்த உதவியும் செய்யாதவர்களைப் போல நடிக்கத் தொடங்கினார்கள்.