Book Creator

காகிதமும் 2000 ரூபாயும்

by s.thirunethra

Cover

Loading...
காகிதமும், 2000 ரூபாயும்!
Loading...
Loading...
எழுதியவர்

சு. திருநேத்ரா
மூன்றாம் வகுப்பு, "அ " பிரிவு
காகிதமும், 2000 ரூபாயும்!
அன்றைய தினம் பெரும் புயல் காற்று ஒன்று வீசியது. அச்சாலையில் எல்லா குப்பைகளும் சிதறிக்கிடந்தன. அந்த குப்பையில் காகிதங்கள் மற்றும் 2000 ரூபாயும் இருந்தது.
அப்போது காகிதம் , 2000 ரூபாய் நோட்டை பார்த்து கேட்டது, "ஏய் ! நீ இங்கே எப்படி வந்தாய்?"
2000 ரூபாய், "தெரியவில்லை, புயல் அடித்த காற்றில், இங்கே எப்படியோ நானும் வந்துவிட்டேன்."

"அது சரி நீ எப்படி இங்கே வந்தாய் ?"
காகிதம், " நான் எப்பவும் இப்படித்தான் இங்கே கிடப்பேன்."

"உன்னை மட்டும் ஏன் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்குது. "
2000 ரூபாய், "ஏன்னா, நான் எல்லோரும், எப்படி விரும்புகிறார்களோ அப்படியே மாறி விடுவேன்."
காகிதம், "புரியலையே ?"
2000 ரூபாய் ,"புரியலையா , இப்போ குழந்தைகளுக்கு இனிப்பு வேணும்னா, என்னை கொடுத்தா இனிப்பா வருவேன். பெரியவங்களுக்கு காய்கறிகள், பழங்கள், உடைகள் இப்படி எது வேணுமோ அப்படியே மாறி விடுவேன். "
காகிதம், " ஓ ! அதனால் தான் எல்லோருக்கும் உன்னை பிடிக்கிறதா?"
"உன்னை மட்டும் அனைவரும் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கிறார்கள். மேலும் உன்னோட மதிப்பும் உயர்கிறது. "
2000 ரூபாய், "ஆமாம் , நான் அனைவரையும் சந்தோஷமாக வைத்திருக்கிறேன். அதனால் தான் எல்லோருக்கும் என்னை பிடிக்கிறது. என் மதிப்பு உயர்கிறது. "
காகிதம், "அப்போ நானும் உன்ன மாதிரி மாறப் போறேன்.அப்பதான் உன்னை மாதிரி என்னையும் மதிப்பார்கள். "
2000 ரூபாய், "அதுக்கு என்ன பண்ண போற?"
காகிதம், "இப்ப பாரு !"

(அந்நேரம் காற்று பலமாக அடிக்க, அங்கு வந்த ஒருவரின் மேல் போய் விழுந்தது அந்த காகிதம்.)

அதை எடுத்து அவர், "ச்சீ ! இந்த குப்பை வந்து நம்ம மேல விழுகிறதே. "
PrevNext