Loading...

Loading...
நண்பர்கள்Loading...
எழுத்தாளர்: சஹஸ்ரா நடராஜன்Loading...
நிலை 4 

விஜயும் அமீரும் ஒரு ஊரில் வசித்து வந்தனர். விஜய் நன்றாகப் பேசுவான். அவனுக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர்.

அமீருக்கு விஜய் போன்று நிறைய நண்பர்கள் வேண்டும் என்று ஆசை இருந்தது. அதனால் எல்லா நண்பர்களிடமும் தேடிச் சென்று பேசுவான்.

விஜய் நிறைய விளையாட்டுப் பொருட்கள் வைத்திருந்தான். அதை அனைவரிடமும் காட்டி மகிழ்வான். அதனால் அவன் வீட்டில் நிறைய நண்பர்கள் பட்டாளம் இருந்தது.

அமீர் அவனது பெற்றோரிடம் தனக்கு நண்பர்கள் அதிகம் இல்லை என்று சொல்லி வருத்தப்பட்டான். பெற்றோர், இதற்காக கவலைப் பட வேண்டாம் என்று ஆறுதல் கூறினர்.
